அண்ணாமலை எனும் கிரி உருவாகிய கிருபைக்கடல்
Non-returnable
Rs.220.00
Tags:
Product Details
அண்ணாமலை எனும் கிரி உருவாகிய கிருபைக்கடல்
பகவான் ரமணர் அருணாசலேஸ்வரனைப் போற்றிப் பல துதிப்பாடல்களை பல மொழிகளில் இயற்றியுள்ளார், அவற்றுள் சம்ஸ்க்ருத மூலமான “அருணாசல மாகாத்மியத்திலிருந்து ஏழு பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதில் ஒரு பாடலில்,
“அருணாசல க்ஷேத்திரத்தில் யாம் தேஜோமூர்த்தமாக எழுந்தருளி இருப்பினும், கருணையினால் அதை மறைத்து ஒளியடங்கிய சாந்தமலையாக நிலைபெற்று ஒளிர்வது, எமது அருளால் உலகனைத்தும் தாங்கி ரக்ஷிக்கும் பொருட்டேயாகும். மேலும் அருணகிரி யோகியென சித்தவடிவத்தில் நான் என்றென்றும் இந்த மலையின்கண் வீற்றிருப்பேன். எமது மலைவடிவின் உள்ளே அணிமாதி சகல ஐசுவரியங்களும் பொங்கித் ததும்பி ஒளிரும் மிக 'அதிசயமான குகை' என்றும் எப்போதும் உள்ளது”*
என்னும் சிவ வாக்கினை, பகவான் தமிழில் எழில்மிகு பாடலில் கூறியருளியுள்ளார்.
“கைலாயம் சிவபெருமானின் வாசஸ்தலம்; ஆனால் அருணாசலமோ சாக்ஷாத் சிவனேயாம்” என்று பகவான் ரமணர் அடிக்கடிக் கூறுவதுண்டு.
இத்தகு பெருமையுடைய அருணாசலேஸ்வரரைக் குறித்தும், அருணாசல சிவனேயாம் பகவான் ரமணரைப் பற்றியும் பல நூல்கள், மொழிகள் பலவற்றில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. சிறந்த அருணாசல ரமண பக்தரும், ஆச்ரமவாசியுமான, அருணாசல ரமண பதமடைந்த கேப்டன் A.நாராயணன், அண்ணாமலையாரின் வரலாற்றையும், மகிமையையும், மகான்கள், அன்பர்கள் வாழ்க்கையையும் கூறும் அந்நூல்களிலிருந்து கருத்துக்களையும் நிகழ்வுகளையும் இப்புத்தகத்தில் சேர்த்து எளிய வடிவில் விரிவாகத் தொகுத்தளித்துள்ளார்.