Upadesha Manjari Pkt.(Tamil)
அறிவறு சிறுவயதுமுதல் அருணாசல ஸ்மரணத்துடன் விளங்கிய பகவான் ரமணர் மதுரையில் பதினாறு வயதில் மரணானுபவத்தின் மூலம் ஆன்ம ஞானம் விளங்கப் பெற்றவர். பின்னர் இவர் அருணாசலத்தில் 1.9.1896 முதல் மோன மூர்த்தியாக விளங்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே பல்லாயிரக் கணக்கான ஜீவர்கள் இவரை அண்டி ஆன்மலாபம் பெற்று உய்ந்தனர். இவர்களில் சிவப்பிரகாசம் பிள்ளை, கம்பீரம் சேஷய்யர், சாது நடனானந்தர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இம்மூவரும் பெற்ற ஆன்மீக விளக்கங்கள் பின்னர் ஸ்ரீ ரமண நூல்திரட்டில், அருண்மொழித் தொகுப்பு-வசனப் பகுதியாக முறையே 1) நானார்?, 2) விசார சங்கிரகம், 3) உபதேச மஞ்சரி என்ற தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.
சாது நடனானந்தர் ஸ்ரீ பகவானது உபதேச நுட்பங்க விரிவாக விளக்கி வரைந்த ஸ்ரீ ரமண தரிசனம் என்னும் நூலுக்கு மற்றொரு ரமண பக்தரான ஸ்ரீ விசுவநாத சுவாமி எழுதிய நூன்முகத்தில் உபதேச மஞ்சரியைப் பற்றி, "சம்பாஷணைத் தொகுப்பாய இந்நூலையும் இதன் ஆசிரியரையும் பற்றி ஸ்ரீ பகவானே பலகால் சிறப்பித்துப் பேசியுள்ளதை அன்பர் பலர் அறிவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பக்கங்கள் 60