Ulladu Narpadu Commentary(Tamil)
Non-returnable
Rs.170.00
Product Details
Language Tamil."பிரம்மம் என்னும் பெயரறியாமலே பிரம்மஞானம் பெற்றவர்" பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். தன்னனுபவத்தையே நூலறிவுக் கலப்பின்றி அனவரதமும் "ஆன்மவித்தை ஐயே அதிசுலபம்"; "மார்க்கம் நேர் ஆர்க்கும் இது" என்று பறைசாற்றி வந்தவர். கற்பகத்தருவாய் விளங்கும் அவரடி பணிந்த அன்பர்கள் தத்தம் சாதனா பக்குவத்திற்கேற்ப "எந்தெய்வம், தந்தெய்வம்" என்று அவரைப் போற்றிப் பயனடைந்தனரெனினும், அவர் பெற்ற அனுபவத்தின் நேர் மார்க்கமாம் விசார மார்க்கத்தையே விளக்கவேண்டி நின்ற சில அன்பர்களின் ஐயம் தெளிவுபெற எழுந்ததே உள்ளது நாற்பது. "யார்" (லக்ஷ்மண சர்மா) அவர்கள் இந்நூலினையே தன் ஆன்ம சாதனைக்கு வேண்டிய ச்ரவண, மனன நிதித்யாசனங்களாகக் கைக்கொண்டு வடமொழியாக்கம் செய்தும், தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவுரை இயற்றியருளினார்.
சகல உபநிஷத்துக்களின் சாரத்தை இறையருளானது ஸ்ரீ பகவான் மூலம் எளிமையாக ஆன்மீக உலகிற்கு வெளிக்கொணர்ந்துள்ள இவ்வரிய மூலநூலை உரையுடன் ஓதி உணர்ந்தோர், ஆன்ம சொரூபத்தை அடைவர் என்பதில் ஐயமேதுமில்லை.
பக்கங்கள் 205