Thayum Neye,Thanthayum Neye(Tamil)
Non-returnable
Rs.100.00
Product Details
Language Tamil.ரமண பகவானைப் பற்றிய நூல்களுள் அவரது அடியார்களுடைய நினைவுத் தொகுப்பு நூல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. மன இயல்பால் வேறுபட்ட தம் அடியார்களை அவரவர்க்கேற்ற வழியில் பகவான் நடத்தியதையும், பகவான் அடியார்க்கு எளியனாகத் திகழ்ந்ததையும் அடியார்களது நினைவுத் தொகுப்பு நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. பகவானிடம் நீண்ட காலம் நெருங்கிப் பழகி அவரது சந்நிதியில் திளைக்கும் பேறு பெற்ற தேவராஜ முதலியாரது இந்நினைவுத் தொகுப்பு முதலில் ஆங்கிலத்தில் 1960-இல் வெளியிடப்பெற்றது. பகவானைத் தமது தாயாகவும் தந்தையாகவும் பாவித்து அவரது அன்பையும் அரவணைப்பையும் வேண்டி ஒரு குழந்தையைப்போல் அவரை அணுகுவதையே தமக்கு உகந்த வழியாகப் பின்பற்றியவர் முதலியார் அவர்கள்.
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றுள் பகவான் அடிக்கடி குறிப்பிட்ட முக்கியமான பாடல்களைப் பற்றிய விவரத்தை முதலியார் இந்நூலில் தந்துள்ளது தமிழன்பர் பலருக்கும் பயன்படும். இப்பாடல்களையும், மேலும் சாதக சித்த சம்வாதம், ராமநாதபிரம்மச்சாரி அருளிய ஸ்தோத்ர அனுபூதி முதலியவைகளையும் சாதகர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் 9 பிற்பால் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பகவான் முதலியார்க்களித்த உபதேசங்களும் அறிவுரைகளும் சாதகர்களுக்குப் பெரிதும் துணை புரியும்.
பக்கங்கள் 194