
Sri Ramanasrama Vazhvum Ninaivum(Tamil)
ஸ்ரீமதி சூரிநாகம்மா, 'ஸ்ரீ ரமணாச்ரமத்தி லிருந்து கடிதங்கள்' மூலம் ரமண அன்பர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாசிரியர் தெலுங்கில் எழுதிய 'ஸ்ரீ ரமணாச்ரம நினைவுகள்' மற்றும்
'ஸ்ரீ ரமணாச்ரம வாழ்வு' ஆகிய இரண்டு நூல்களும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டு பதிப்பிக்கப் பட்டுள்ளது.
மேற்கூறிய இவ்விரு நூல்களும் தமிழாக்கம் செய்யப்பட்டு, தமிழ்கூறும் நல்லுலகு பயன்பெறும் வகையில் வெளிவந்துள்ளதே
'ஸ்ரீ ரமணாச்ரம வாழ்வும் நினைவும்' என்னும் இந்நூல்.
ரமண சந்நிதியில் நடந்த நிகழ்ச்சிகளை இந்நூலாசிரியர் சுவைபடச்
சித்திரிக்கின்ற நயம், நாமும் அவற்றை நேரில் காண்பதுபோன்ற உணர்வை அளிக்கிறது. ரமண அன்பர்களுக்கு இந்நூல் ஒரு விருந்தாக அமையும்
என்பதில் ஐயமில்லை.
பக்கங்கள் 238