Sri Ramana Sannadhi Murai(Tamil)
Language Tamil. Hard Bound. ஸ்ரீ ரமண சந்நிதிமுறை முதற்பதிப்பு (1933) வெளிவந்த காலத்து ஒருநாள் விசுவநாதசுவாமி என்ற அன்பர் பகவான் திருமுன்னர் அமர்ந்து முகவாபுரி முருகன் என இந்நூலாசிரியரின் பெயரைத் திரும்பத் திரும்ப உரக்கக் கூறித் தமது உவகையை வெளியிட்டார். அது கண்ட பகவான் இச்சொற்களை வைத்தே நீர் ஒரு பாடலை இயற்றும் என்று விசுவநாதசுவாமியைப் பணித்தார். அதற்கு அவர் கையில் ஒரு தாளை வைத்துக்கொண்டு பாடல் புனைய முற்பட்டார். எவ்வளவு முயன்றும் பாடல் இயற்ற இயலாது அத் தாளை பகவானிடமே கொடுத்துவிட்டு ஏகினார். சிறிது நேரம் கழித்து பகவானே முகவாபுரி முருகன் என்னும் சொற்கள் அமைந்த பின்வரும் பாடலை எழுதி அதற்கடியில் விசுவநாதன் என்றும் எழுதிவைத்தார்.
அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.
இத்துதிநூல் தமது திருவருள் ஆற்றலை விளக்குவது எனவும், திருவாசகத்திற்கு நிகர் எனவும், உலகோர் ஓதி உய்ய வெளிவந்தது எனவும் பகவான் தமது திருவாக்காலேயே இப்பாடலின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.
பக்கங்கள் xxxiv+539