
Sri Ramana Pallandu (Tamil)
Language Tamil by Bharatvaji Mugavaik Kanna Muruganar
இப்புத்தகம் ஸ்ரீ முருகனார் இயற்றிய 'ஸ்ரீரமண சரணப் பல்லாண்டு' என்னும் துதி நூலின் இரண்டாம் பதிப்பாகும். இந்நூலின் முதற் பதிப்பைக் குறித்து பகவான் பக்தர் தேவராஜ முதலியார் 'தாயும் நீயே! தந்தையும் நீயே!' என்னும் தமது நினைவுத் தொகுப்பு நூலில் (பக்கம் 78, 1999 ஆம் ஆண்டுப் பதிப்பு) பின்வருமாறு கூறுகிறார்:
"இங்கு முருகனார் இயற்றிய 'சரணப் பல்லாண்டு' பற்றிக் கூறுவது பொருத்தமாம். இந்நூல் அவர் முதலில் இயற்றிய 'சந்நிதிமுறை' போல் பிரபலமாகவில்லை; எனினும் இந்நூலைப் படித்தால் இது அவருடைய ஏனைய நூல்களைப்போல் சிறந்தது என்பது விளங்கும்; மேலும் பகவானை நாள்தோறும் வழிபடுவதற்கு இது ஏனைய நூல்களைக் காட்டிலும் உகந்ததும் ஆகும். எனவே இந்நூலை அடியார்களுக்குப் பரிந்துரைக்கிறேன்."
இப்பதிப்பில் சரணத் திருவகவல் (முருகனாரால் 1622 அடிகளாக விரிவாக்கப்பெற்றது), சரணத் திருவெண்பா (109 பாடல்கள்), புனர்வசு வண்ணம் (11 பாடல்கள்), பிரார்த்தனை மாலை (11 பாடல்கள்), திருப்பல்லாண்டு (1) (13 பாடல்கள்), திருப்பல்லாண்டு (2) (111 பாடல்கள்) ஆகியவை இடம் பெறுகின்றன. தலையிடம் பெறும் 'சரணத் திருவகவல்' ஆழமும் அகலமும் நுட்பமும் ஒருங்கே அமையப் பெற்ற அரிய பாராயண நூலாகும். ஏனைய பகுதிகளும் பாராயணத்திற்கு உகந்தவையே.
பக்தி செய்யச் செய்யப் பதுக்குவிட்டு ஒளிரும் பரமன் ரமணன் புகழ்பாடும் இத்துதி நூலை அன்பர்கள் ஓதி இன்புறுவராக.