Sri Ramana Padamalai(Tamil)
Non-returnable
Rs.35.00
Product Details
Language Tamil.ஸ்ரீ ரமண பக்தருள் பழையவரும் விழுமியவருமாம் ஒருவரின் பழுத்த இதயத்துப் பக்தி மிகுதியால் பொங்கி வழிந்தவையாம் இந்நூலின் பாக்கள். ரமண பகவான் நாற்பது வருடங்கட்குமுன் அன்புடன் தமக்கு அருளிய அருள் மொழிகளை அதிக சிரத்தையுடன் தமிழில் திரட்டி வைத்ததால் இப்போது ரமணமறை என மதிக்கப் பெறும் "நான்யார்" என்னும் நூல் தமிழிலும் இதர இந்திய மொழிகளிலும் அயல்நாட்டு மொழிகள்சிலவற்றுங்கூட வெளிவரக் காரணமாய்ப் பொதுவாய் சகல உலக மக்களின் நன்றிக்கும் சிறப்பாக ரமண அன்பர்களின் நன்றிக்கும் உரியாராயினர் இப்பெரியார். இவரால் 1937-43 வருடங்கட்கு இடையில் இயற்றப்பெற்ற இவ் விருத்தங்கள் படிப்பார், பாடுவார் யாவர்க்கும் பக்திப் பரவசத்தையும் பரமானந்தத்தையும் தரத் தக்கனவாய் இருத்தல் பற்றி இங்குப் பிரசுரிக்கப் பெற்றன.
பக்கங்கள் 84
பக்கங்கள் 84