Sri Ramana Darisanam(Tamil)
Non-returnable
Rs.50.00
Product Details
Language Tamil.சிறந்த பக்தரும் பண்டிதருமான சாது நடனானந்தர் முதன்முதலில் கந்தாச்ரமத்தில் ஸ்ரீ பகவானை தரிசனம் செய்தார். இவர் வினா-விடை வடிவில் தொகுத்த ஸ்ரீ பகவானது உபதேச மொழிகள் "உபதேச மஞ்சரி" என்ற தலைப்பில் "ஸ்ரீ ரமண நூற்றிரட்டு" என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. மற்றும் ஸ்ரீ ரமண உபதேசங்களை "விசார சங்கிரகம்" என்ற தலைப்பில் வசன நடையிலும், வினா-விடை வடிவிலும் தொகுத்தார். ஸ்ரீ பகவான் பணித்தருளியபடி முருகனார் இயற்றிய "குருவாசகக் கோவை" என்னும் நூலிலுள்ள பாடல்களை கருத்தொற்றுமைக்கு ஏற்றவாறு வரிசைப் படுத்தியவரும் இவரே.
1950ஆம் ஆண்டு முற்பகுதியில் சாது நடனானந்தர் "ஸ்ரீ ரமண தரிசனம்" என்னும் இந்நூலை இயற்றினார். இந்நூல் இதுவரை வெளிவராத ஸ்ரீ பகவானது வரலாற்று நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல் அந்நிகழ்ச்சிகளில் அடங்கியுள்ள தத்துவ மற்றும் உபதேசக் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கித் தெளிவாக விளக்குகிறது.
இந்நூலில் இடம் பெற்றுள்ள இவரது பாடல்கள் ஸ்ரீ பகவானின் சந்நிதி மகிமையால் அன்னார் பெற்ற அரிய அத்யாத்ம அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.
பக்கங்கள் 127