Sri Maharshi Voy Mozhi(Tamil)
Languaga Tamil.ஆன்மீக சாதனையில், ஐயங்கள் சாதகர் அநேகர்க்கும் அடிக்கடித் தோன்றி மனத்தைப் பெரிதும் அலைக்கின்றன. பகவான் அருளிய இவ் வாய்மொழி மெய்ஞ்ஞான சாரமாய் அவரது சர்வோத்தம அநுபூதியை ஆதாரமாகக் கொண்டிருப்பதாலும், முமுக்ஷு உண்மையை அறிய முயல்வது மனிதனது சாதாரணப் பகுத்தறிவைக் கொண்டே யாதலாலும், யதார்த்தமான ஒரே உண்மை பரமாத்மா அல்லது ப்ரஹ்மமே யென்னும் பரிபூரண அத்வைத தத்துவம் இந்நூல் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது.
உண்மை என்றும் எவர்க்கும் ஒன்றே யாதலால், தனது சொந்த அநுபவத்தையே நன்கு ஆய்ந்து, தனது இருப்பின் மூலமாம் இதயத்தைத் தேடுமாறும், அதுவே சாசுவத சத்திய மென்றும், பிற வனைத்தும் அம் மூலத்தின் வெளித் தோற்றங்களே யென்றும் சிரத்தையுள்ள சாதகனுக்கு ஸ்ரீ பகவான் வழி காட்டுகிறார்.
பக்கங்கள் 98