Sadhuvin Ninaivugal(Tamil)
Non-returnable
Rs.100.00
Product Details
Language Tamil.
பகவான் ஸ்ரீ ரமணரைச் சரணடைந்து ஆன்மிகப்பேறு பெற்ற பக்தர்களுள் மேஜர் சாட்விக்கும் ஒருவர். பால்பிரண்டன் எழுதிய "எ சர்ச் இன் சீக்ரெட் இண்டியா" புத்தகத்தைப் படித்தவுடனே "என் குருநாதர் இதோ இங்குள்ளார்" என்று தீர்மானித்து 1935 இல் ஸ்ரீ பகவானைத் தரிசித்ததும், அவர் தனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் போன்றும், தனக்கும் ஸ்ரீ பகவானுக்குமுள்ள உறவு எப்போதும் தொடர்ந்து இருந்து வருவது போலவும் உணர்ந்ததை சாட்விக் குறிப்பிட்டுள்ளார்.
"சாட்விக் முன்பு நம்முடனிருந்தார்; மேல்நாட்டில் பிறக்க வேண்டுமென்று கொஞ்சம் ஆசை அவருக்கு இருந்தது; அது இப்போது நிறைவேறிவிட்டது" என்று இவரைப் பற்றி ஸ்ரீ பகவான் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில நாட்டவராகிய இவருக்கு வேத பாராயணத்திலும், ஸ்ரீ சக்ர வழிபாட்டிலும் இருந்த ஈடுபாடு அளவிடற்கரியது. "கிறிஸ்துவ மதம் புனர் ஜென்மத்தை ஏற்காதது, ஒருவன் தன் ஆன்ம சாதனையை பிற்காலத்திற்கு ஒத்திப் போடக்கூடாது என்ற கருத்தில் தான்" என்ற இவரது விளக்கம் (பக்கம் 63), இவரது ஆழ்ந்த ஆன்மிக நாட்டத்தைத் தெற்றென விளக்குகிறது. தன்னையன்றி அன்னியம் ஒன்றும் அறியா பகவான், சாதகர்களின் சாக்ஷாத்காரத்தின் பொருட்டு குரு-சிஷ்ய உறவை அங்கீகரித்திருப்பதையும் இப்புத்தகம் இரு இடங்களில் தெளிவாக விளக்குகிறது.
. . .ஒரு குருவின் தலையாய கடமை தன்னுடைய நிரந்தர சாந்நித்தியத்தை தன் சீடர்களுக்கு உறுதிப்படுத்துவதுதான். இதைச் செய்து முடித்தபின் அவர் தன் தேகத்தை விடுவதற்குத் தடையேதுமில்லை. . ." (பக்கம் 92. ஸ்ரீ பகவான் தேகநலிவுற்றிருந்த காலத்தில் கூறியது)
. . . ஆயினும் சாதகனுக்கு குரு-சிஷ்ய உறவு என்பது சந்தேகமின்றி உள்ளதுதான். அப்படி ஒரு தொடர்பு இல்லையெனில் அவர் (சாட்விக்) ஏன் இத்துணை ஆயிரம் மைல்கள் கடந்து வந்து இங்கேயே இருக்கவேண்டும்?. . ." (பக்கம் 101)
பக்கங்கள் 148