Ramanopadesa Ratanamalai(Tamil)
Non-returnable
Rs.65.00
Product Details
தேவராஜ முதலியார் பகவான் ரமணரைத் தாயும் தந்தையுமாகவும் தன்னைச் சேயாகவும் பாவித்த பரம பக்தர். பல்லாண்டுகள் பகவானின் தர்சனத்திற்காக வந்து சென்று பின்னர் 1942லிருந்து 1946வரை அவரது தெய்வீக முன்னிலையில் இருந்துவந்த முதலியார் அவர்கள் பகவானிடம் சற்றும் தயக்கமின்றி கேள்விகள் கேட்டும், சிரித்துப் பேசியும் இயல்பாக இருந்துவந்த மிகச்சில அணுக்க அடியார்களில் ஒருவராவார். பகவானது திருவாயிலிருந்து உதிர்ந்த சொல் ஒவ்வொன்றுமே விலைமதிப்பற்ற ஒரு ரத்தினம். மோன மொழி பேசும் பகவான் தமது அடியார்கள்மீது கொண்ட அளப்பரிய கருணையால் உதிர்த்தருளிய உபதேச ரத்தினங்களிலிருந்து பலவற்றைத் தேர்ந்தெடுத்து பக்த கோடியரின் நலனுக்காக முதலியாரவர்கள் Gems from Bhagavan என்ற ஆங்கில நூல் உருவில் பக்தியுடன் ஒரு ரத்தின மாலையைத் தொடுத்துத் தந்தார்.
இந்த ரத்தினங்கள் அனுதினமும் பகவானுடன், பகவான் ரமணர் வசனாம்ருதம், நானார்?, உள்ளது நாற்பது, உபதேச உந்தியார் போன்ற நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இந்தச் சிறிய நூலின் வாயிலாக எத்தகைய பெரிய உதவியைத் தொகுப்பாளர் ஸாதகர்களுக்கு நல்கியுள்ளாரென்பது இதைப் படிப்போருக்குத் தெளிவாகும்.
ஏதோ காரணங்களால், இந்நூல் இதுவரையில் தமிழில் வெளிவரவில்லை. இப்பொழுது அந்தக் குறை நீக்கப்பட்டுள்ளது.