Ramana Vijayam(Tamil)
Non-returnable
Rs.300.00
Product Details
Language Tamil.சகஜ-ஆன்ம-நிலை"யை உலகுக்குக் காட்டிக் கொடுத்து ஆன்மீகப் ‘புரட்சி’யை ஏற்படுத்தியவர் பகவான் ரமணர். தெய்வானுக்கிரகத்தால் அவரது தொடர்பைப் பெற்றவர்களின் வாழ்வு தெய்வீக மயமாகியது.
ரமண மதுரானுபவம்" என்ற இந்நூலின் முதல்பாகம் தேசூர் அகிலாண்டம்மாள் என்ற எளிய அடியார், ஸ்ரீ பகவானுக்கு அன்னமளிக்கும் திருத்தொண்டாற்றி அன்னாரது அளவற்ற கருணைக்குப் பாத்திரமானார். எளிய நிகழ்ச்சிகளின் மூலம் பெரிய வேதாந்தக் கருத்துக்களை பகவான் ரமணர் இவ்வம்மையாரின் மூலம் நமக்கும் காட்டித் தந்துள்ளார்.
காசி இந்து பல்கலைக்கழகத்தில் பயின்ற சிறந்த படிப்பாளியான பலராம ரெட்டியாரது அனுபவங்கள் இந்நூலின் இரண்டாவது பாகமாக அமைந்துள்ளது. தனது ஆன்மீக வாழ்விற்கான தகுந்த குருவை நாடி, அரவிந்தாச்ரமம் முதலான பல இடங்களை நாடி முடிவில் இவர், நிரந்தர ரமண கருணா விலாசத்திற்குப் பாத்திரரானார்.
குருவின் அருளானது பண்டிதர், பாமரர் என்ற பேதமின்றி யாவரிடத்தும் பரவக்கூடியது என்ற உண்மையை மேற்கண்ட இரு அடியார்களது ரமணானுபவங்கள் விளக்குகின்றன.
மேலும் குருவின் அருட்பார்வை கிடைத்து விட்டால் புலிவாயிற்பட்ட இரையாகி நாம் கடைத்தேறி விடலாம். ஸ்ரீ ரமண குருவருளை நமக்குப் பெற்றுத் தருவதில் அவரது அடியார்களின் அனுபவ நூல்கள் நமக்கு உறுதுணையாக உள்ளதால் இவ்வரிய நூலையும் ஓதுவோர் ஸ்ரீ ரமண கருணாவிலாசத்திற்குப் பாத்திரராவார்.
பக்கங்கள் 163