Prani Mitra Bhagavan - Part II(Tamil)
Non-returnable
Rs.40.00
Product Details
Language Tamil.
பகவான் பசு லக்ஷ்மியிடம் காட்டிய அன்பு, அவளுக்கு முக்தி அளித்தது போன்ற சம்பவங்களை பிராணிமித்ர பகவான் ரமணர் - பாகம்-1 இல் கண்டோம். இவ்விரண்டாம் பாகத்தில் குரங்குகள் மற்றும் மயில்களிடத்தில், ஸ்ரீ பகவானது அளவற்ற கருணையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்துள்ளோம்.
வானரர்களுக்கு உணவு மறுக்கப்பட்டபோது இது அவர்களுக்குப் பிறந்த வீடு. நாம்தான் அந்நியர்கள். அவர்களை விரட்ட நமக்கு உரிமை ஏது? என்று ஸ்ரீ பகவான் கூறியது, அவர்கள்மீது பகவான் கொண்டிருந்த எல்லையற்ற கருணையை நமக்குக் காட்டுகிறது. மேலும் வானர ஹாஸ்யங்கள் என்ற தலைப்பில் அவர் உணர்த்தியுள்ள கருத்துக்கள் தொண்டருக்கு மட்டுமன்று, நம் அனைவருக்கும்தான்!
பகவான் சுப்ரமண்யரவதாரமென்பது சில அடியார்களின் நம்பிக்கை. மயிலேறும் பெருமானாகிய முருகனுக்கு ஒரு மயில்தான் வாகனமாயிருந்தது. மயில் ஏறாத பெருமானாகிய பகவானுக்குத் திரும்பிய இடமெல்லாம் மயில்கள். பகவான் கந்தாச்ரமத்தில் வசித்து வந்தபோதே மயில்கள் அவருடன் இருந்து வந்தன.
பகவானின் மகா நிர்வாண தினத்தின் முந்தைய நாள் உடல் உபாதை பயங்கரமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறி வந்த சமயம். பகவான் படுத்திருந்த அறைக்கு அருகிலுள்ள மரத்தின்மீது மயிலொன்று அகவுவதை செவிமடுத்த பகவான் மயிலுக்கெல்லாம் ஆஹாரம் கொடுக்கலையா? என்று அந்நேரத்திலும் வினவியது, மயில்களிடம் கொண்டிருந்த மாறாத தயையின் பொருட்டேயல்லவா!
தன்மய ஆனந்தரான ரமணர் தன் அருட்பார்வைக்குட்பட்ட ஜீவராசிகள் அனைத்திற்கும் மித்திரராகவும், அடைக்கலமாகவும் விளங்கி, இவ்வாறு அருள்புரிந்த நிகழ்ச்சிகள் யாவும் ஸ்ரீ ரமணாச்ரம நூல்களில் பல மொழிகளில் பல்கிப் பரந்துள்ளன. இவற்றில் பலவற்றை தற்போது இந்நூல் குத்தளித்துள்ளோம்.இவைகளை படித்துணர்ந்து, நாமும் ஸ்ரீ ரமணரருள் பெற்று உய்வோமாக!
பக்கங்கள் 51