Prani Mithra Bhagavan Part I(Tamil)
Non-returnable
Rs.60.00
Product Details
Language Tamil.உலகை ஒருநிலையில் இயங்க வைக்கின்ற சக்தியே நம் உடனுள்ளும் இருந்து நம்மை இயக்கி வருகின்றது. அதுவே நான் என்று நம்மை நாம் குறிப்பிடும் உண்மை வஸ்து. அதை உணர்ந்து விட்டால் எல்லா உயிர்களுள்ளும் நாமே விளங்குவதையும் நாம் உணரலாம். எங்கும் நானே எதிலும் நானே என்று உணர்ந்தபிறகு நமக்கு அன்னியம் என்று எதுவுமே இல்லை. இந்த நிலையில் பசு, பக்ஷி மிருகங்கள் ஏன், அனைத்து உயிர்களும்கூட நம்மையும் அவர்களுள் ஒருவராக அனுசரித்து வா
ம் நிலை இயல்பாகவே நமக்குக் கிடைத்து விடுகின்றது. இதைத்தான் பகவான் ரமணரது அருணாசல வாழ்க்கை நமக்குத் தெளிவாக அறிவுறுத்துகிறது.
எங்கும் நிறைந்த இறையுணர்வாகத் தன்னை உணர்ந்த பகவான் ரமணரின் ஐம்பது ஆண்டுகால அண்ணாமலை வாசம் அவர் எவ்வாறு பிராணிகளின் மித்திரராகவும் விளங்கி அவைகளுக்கு ஆன்மீக உணர்வையும் முக்தியையும்கூட அனுக்கிரகித்தார் என்பதை ஸ்ரீ ரமணாச்ரம நூல்கள் பலவற்றில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வானரங்களின் ராஜ்ஜிய பரிபாலனம் அவருக்கு நன்கு தெரியுமாதலால் பல வானர ராஜாக்கள் அவரிடம் வந்து தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சுகமாக வாழ்ந்தனர். புதிதாகப் பிறந்த வானரக் குழந்தையை அவரிடம் கொண்டு வந்து காட்டி அனுக்கிரகம் பெற்றன. பல மயில்கள் அவரை அண்டி இன்றும் ரமணாச்ரமத்தில் வாழ்ந்து வருகின்றன. பாம்புகளும் அவரைப் பார்த்து இவரும் நம்முள் ஒருவரே என்று சமத்துவம் கொண்டாடி அவர் உடல்மீது ஊர்ந்து சென்று தமது அன்பை அவருக்குக் காட்டிச் சென்றன. பகையுணர்வு கொண்ட பாம்பும் மயிலும் அவரது சந்நிதியில் இன்றும் நட்புணர்வுடன் நடமாடுகின்றன. பறவைகளும் அவரருகே கூடுகட்டி அவரது அன்பான அரவணைப்பைப் பெறுகின்றன. இவ்வாறு பல நூறு அதிசயங்களை விவரித்துக் கொண்டே போகலாம். அதுவே ஒரு பெரிய காவியமாக அமையும். இவற்றுள் சிலவற்றை ஹரிஹரசுப்பிரமணியன் என்ற அன்பர் நமக்கு எளிய சம்பாஷணை வடிவில் விளக்கியுள்ளார். பிராணிகள் பகவான் ரமணரின் அருளுக்கு பாத்திரமானதுபோல் நாமும் அவரருளை உணர்ந்து உய்வோமாக!
பக்கங்கள் 65