Maharshi Arun Mozhi(Tamil)
Non-returnable
Rs.80.00
Product Details
Language Tamil பால் பிரண்டன் 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவர். தமக்குற்ற ஆன்மஞான வேட்கையைத் தீர்த்து அக அமைதி அருளவல்ல ஞான வள்ளலைத்தேடி சுமார் 80 ஆண்டுகளுக்குமுன் இந்தியா வந்தடைந்தார். நாடெங்கும் சுற்றிப் பல்வேறு நிலையிலுள்ள யோகிகளையும் சாதுக்களையும் கண்டு திருப்தியுறாமல் முடிவாக காஞ்சி ஆசாரிய ஸ்வாமிகளை அடைந்தார். அவர் தன்னால் பிரண்டனை சீடனாக ஏற்றுக் கொள்ள இயலாமையை எடுத்துரைத்து ஸ்ரீரமண மகரிஷிகளைக் காணுமாறு பணித்ததன் பேரில் பிரண்டன் திருவருணை வந்தடைந்து தமது தேடல் முடிவடைந்ததை உணர்ந்தார். இந்தியாவில் தாம் மேற்கொண்ட பயணங்களையும் தமது அனுபவங்களையும் ரகசியஇந்தியா A Search in Secret India என்ற ஆங்கில நூலில் அவர் விவரமாக எ
ழுதினார். அந்நூல் மிகப் பிரபலமாகி உலகெலாம் ஸ்ரீரமண மகரிஷியின் பெருமையை விளங்கச் செய்தது.
தமது நூலில் பால் பிரண்டன் தான் ஸ்ரீரமண மகரிஷிகளுடன் நடத்திய உரையாடல்களையும் ஸ்ரீரமணாச்ரமத்தில் தமக்கு நேர்ந்த அனுபவங்களையும் மூன்று அத்தியாயங்களில் எ
ழுதியுள்ளார். இந்தப் பகுதியை The Maharshi and His Message என்ற தலைப்பில் ஸ்ரீரமணாச்ரமம் ஒரு ஆங்கில நூலாக வெளியிட்டது. அந்நூலின் தமிழாக்கமே மகரிஷி அருண்மொழி. தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலைப் படித்துப் பயன்பெறுமன நம்புகின்றோம்.
பக்கங்கள் 112