Kaivalya Navaneetam(Tamil)
"படர்ந்த வேதாந்தம் என்னும் பாற்கடல் மொண்டு முன்னூல் குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்கள் எல்லாங் காய்ச்சிக் கடைந்தெடுத்து அளித்தேன் கைவல்ய நவநீதத்தை (வெண்ணையை). (இதனை) அடைந்தவர் விஷய விஷயமண் தின்று அலைவரோ" -- என்று இந்நூல் விஷயத்தை, நூலாசிரியரான ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகள் (ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்) விளக்குகின்றார்.
"பிரம்ம பாவனையை மூடிப் பேதங் காட்டுவது அஞ்ஞானம்"
"குரவன் வாக்கியம் நம்பாமல் குழம்புவது சந்தேகம்"
"திரமறு ஜகம் மெய்யென்றும் தேகம் நானென்றும் விரவிய மோகம் விபரீதம்" -- ஆகையால், "மகாவாக்கியார்த்தத்தை கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே மோக்ஷ சுகத்தை அடைவாய்" என்றும் உய்யவே முக்தி நல்கிய குருவுக்கு நாம் ஆற்றும் நன்றிக் கடன், சொரூபஞான நிஷ்டனாயிருப்பதே" என்றும்,
மற்றும் மாயையைப் பற்றிய அடியார்களின் சந்தேகங்கள் தெளிவுற பகவான் ஸ்ரீரமணர் இந்நூலிலிருந்து மேற்கோள்கள் காட்டியதுண்டு. ஆன்மதாகங் கொண்ட முமுட்சுக்களுக்கு இன்றியமையாத நூலாக இந்நூல் விளங்குவதால், அன்பர்கள் இதனை ஓதியுணர்ந்து சந்தேக விபரீதங்கள் நீங்கி சொரூபானந்தக் கடலில் மூழ்கித் திளைப்பாராக!
பக்கங்கள் 136