
Guru Ramana Tiruvadi Vazhvu(Tamil)
"சகஜ-ஆன்ம-நிலையை" உலகுக்குக் காட்டிக் கொடுத்து ஆன்மிகப் 'புரட்சி'யை ஏற்படுத்தியவர் பகவான் ரமணர். தெய்வானுக்கிரகத்தால் அவரது தொடர்பைப் பெற்றவர்களின் வாழ்வு தெய்வீக மயமாகியது.
ஸ்ரீ ரமணரின் திருவடியில் அமர்ந்து அருளனுபவம் பெற்ற பாக்கியசாலிகளில் ஹம்ப்ரீஸ், சுந்தரேசய்யர், நம்பியார், தேசூர் அகிலாண்டம்மாள் மற்றும் பலராம ரெட்டியார் ஆகிய ஐவரின் ரமணானுபவத்தைப் பற்றிய புத்தகங்களின் தொகுப்பே இந்நூல்.
குருவின் அருளானது பண்டிதர், பாமரர் என்ற பேதமின்றி யாவரிடத்தும் பரவக்கூடியது என்ற உண்மையை மேற்கூறிய அடியார்களது ரமணானுபவங்கள் விளக்குகின்றன.
காலதேச வர்த்தமானங்கள் கடந்து ஒளிரும் பரப்பிரம்ம வஸ்துவான ஸ்ரீபகவானது அருள் வேண்டுவோர்க்கு வேண்டியாங்கு கிடைக்கும் என்ற உண்மை விளக்கம் இப்புத்தகத்தில் பற்பல நிகழ்ச்சிகளின் மூலம் சித்தரிக்கப் படுகிறது.
மேலும் குருவின் அருட்பார்வை கிடைத்து விட்டால் புலிவாயிற் பட்ட இரையாகி நாம் கடைத்தேறி விடலாம்.
ரமண குருவருளை நமக்குப் பெற்றுத் தருவதில் அவரது அடியார்களின் அனுபவ நூல்கள் நமக்கு உறுதுணையாக உள்ளதால் இவ்வரிய நூலை ஓதி ரமண கருணாவிலாசத்திற்குப் பாத்திரராவராக!
பக்கங்கள் xiv+422