
Eshwara Geethai(Tamil)
நாம் ஆன்மசொரூபமாகவே இருப்பதை மறந்த மறப்பினாலேயே, ஜீவனென்னும் நாமத்தோடு மனோரூபமாய்ப் பந்தத்தை அடைகின்றோம். எனவே வாசனாரூபமாகிய மனத்தை வென்று ஆன்ம சாக்ஷாத்காரமடைய வேதாந்த சிரவண, மனனங்கள் அவசியமாகின்றன. பகவான் ரமணரின் சந்நிதியில் அன்பர்கள் சந்தேக விபரீதங்கள், தீரவேண்டி நின்றபோது, "அவர் ஆன்மாவாய் என்னகத்தே இருந்தின்று தமிழ் சொல்வானும் அன்னவனன்றி மற்றார்?" என்று பறைசாற்றி பல வேதாந்த கிரந்தங்களை மொழிபெயர்த்தும் மேற்கோள்காட்டியும் அருளியுள்ளார்.
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய கூர்ம புராணத்தில், ஈசுவரன் கூர்ம நாராயணனுக்கு உபதேசித்த முறையாக வடமொழியில் அமைந்துள்ளது "ஈசுவர கீதை". இது ஸ்ரீதத்துவராய சுவாமிகளால் (11 அத்தியாயம், 338 பாடல்களாக) தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாசிகானந்த ஞானாசாரிய சுவாமிகள் இயற்றிய ரஹஸ்யார்த்த விளக்கவுரையைத் தழுவிய பொழிப்புரையுடன் ஈசுவர கீதை சாதகர்களின் உபயோகத்திற்காக தற்போது வெளியிடப்படுகிறது. இக்கீதையின் அத்தியாயம் 11, பாடல் 15-ம், பகவான் ரமணரின் உபதேச உந்தியார் 6-வது பாடலும் (வழுத்தலில் வாக்குச்ச வாக்குட் செபத்தில்...) முறையே ஒரே கருத்தின் விளக்கமாகவும், சூத்திரமாகவும் விளங்குவது கவனிக்கத்தக்கது.
பக்கங்கள் 195