Bhagavad Gita Saram(Tamil)
Non-returnable
Rs.25.00
Product Details
Language Tamil.
ஸ்ரீ கண்ணபிரான் அர்ஜுனனுக் கருளிய ஸ்ரீமத் பகவத் கீதையினின்று முமுக்ஷுக்களுக்கு மிகவும் பயன்றரத் தக்கதான நாற்பத்திரண்டு சுலோகங்களை அன்பர்களின் வேண்டுகோட்கிணங்கி பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள் தேர்ந்தெடுத்துக் கருத்துச் சிறப்புற முறைப்படுத்தித் தொகுத்து, அவற்றைத் தமிழ் வெண்பாக்களாக மொழிபெயர்த்தருளியதே இந்நூலாகும்.
இதில் பகவத் கீதையின் உட்கருத்தை உள்ளபடி யறிவிக்கும் பாங்கில் ஞானபரமான முக்கிய விஷயங்களனைத்தும் அடங்குவனவாம். இந்நூல் கீதையின் சாரத்தின் சாரமாய், சிரத்தையுடன் கற்போர் யாவர்க்கும் ஓர் அருள் நிதியா யமைந்துள்ளது.
இதுகாறும் எந்த வியாக்கியானக் கர்த்தாவாலும் எம்மொழியிலும் வெளியிடப்படாததாய் பகவத் கீதையிற் பொதிந்துகிடந்த, வியக்கத் தக்க, பற்பல இரகசியங்களை பகவான் ஸ்ரீ ரமணர் அவ்வப்போது வெளிப்படுத்தி, அவற்றை 42 சுலோகங்களா யருளியதைக் கேட்கும் போது, அன்று கீதாசிரியனாய் அர்ஜுனனது தேர்த் தட்டில் வீற்றிருந்தவர் இந்த ஸ்ரீ ரமண பிரானே யாகும் என்ற சந்தேகமற்ற முடிவுக்கு வரவேண்டியே யிருக்கின்றது.
அன்பர்கள் யாவரும் இக் கீதாசாரத்தைப் பொருளுடன் ஓதி யுணர்ந்து ஸ்ரீ பகவா னருளைப் பெறுவோமாக.
பக்கங்கள் 47