Arunaiyin Arut Kadal(Tamil)
Non-returnable
Rs.25.00
Product Details
Language Tamil. அருணையின் அருட்கடல் என்னும் இந்நூல், இறையியல் எங்ஙனம் வேதகாலம் தொட்டு இடையருதி தத்துவ ஆறாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதனை விளக்கி எழுந்த நூல் நமது சனாதன தர்மத்தின் வழிமுறைகள் காலப்போக்கினை அனுசரித்து மறுபடியும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் என்றும் மாறாமல் ஒளிர்ந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றுகின்ற இறை அவதாரமான ஞானாசிரியர்கள் தமது முன்னோடிகள் காட்டிய வழிமுறைகளை மீண்டும் எடுத்துரைத்ததோடு நில்லாது, இத்தத்துவங்களை இக்கால சமுதாயத்திற்கு இயைந்திருக்குமாறு வடிவமைத்து தருகின்றனர்.
இங்ஙனம் கட்டமைப்பு வேறுபடினும் அடிப்படை ஒன்றேயாக உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுவது "அருணையின் அருட்கடல்" என்னும் இந்நூல் இவ்வையக மக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்ட உதித்த பகவான் ரமண மகரிஷிகளின் நூல்கள் மற்றும் உபதேசங்களாய் ரமண பகவானின் போதனைகளை அழகுற கவிதையாகவும், நூல்களாகவும் எடுத்துரைத்த முருகனார் போன்ற அடியார் நூல்கள், அவர்தம் வாழ்வில் பகவான் சந்நிதியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் உரையாடல்கள் போன்றவைகளை எங்ஙனம் வேத, வேதாந்த உபதேசங்களின் வடிவமைக்கப்பட்ட பிரதிகளாகத் திகழ்கின்றன என்பதனை இந்நூல் விளக்குகிறது.
இந்நூலின் ஆசிரியர் ராம் மோஹன் ரமண கேந்திர பதிப்பான ரமணோதயம் இதழின் ஆசிரியர். மவுண்டன் பாத் இதழின் ஆசிரியர் குழுவிலும் உள்ளவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் உள்ள தத்துவ நூல்களை ஆராய்ந்து கற்றுள்ள இவரது ஆய்வு நலம் அருணையின் அருட்கடலாக வெளிவந்துள்ளது.
பக்கங்கள் 126