
Arulnirai Amudak Kadal(Tamil)
ஸ்ரீ பகவானிடம் ஆன்மலாபம் பெற்ற எண்ணற்ற அடியார்களில் குர்ரம் சுப்பராமய்யா குறிப்பிடத்தக்கவர். மற்ற அடியார்களைவிட இவரிடம் ஸ்ரீ பகவான் சற்றுக் கூடுதலான கருணை காட்டுகின்றார் என்று சக அடியாரான தேவராஜ முதலியார் ஸ்ரீ பகவானிடமே முறையிடும் அளவிற்கு இவர் ஸ்ரீ பகவானது கருணைக்கடலில் மூழ்கித் திளைத்தவர். சுப்பராமய்யா ஸ்ரீ பகவானை அணுகிய முறை, ஒரு குழந்தை தன் பெற்றோரை அணுகுவதைப் போலவே அன்பின் நெகிழ்வுடன் அமைந்திருந்தது.
விதிவசத்தால் இவர் குடும்ப இன்னல்களில் சிக்குண்ட தருணங்களிலெல்லாம் ஸ்ரீ பகவானது அருட்கரம் இவரை இறுக அணைத்துக் காத்ததை இந்நினைவுத் தொகுப்பு படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வருள், வேண்டுவோர்க்கு வேண்டியாங்கு கிடைப்பதென்பதையும் முதலியாரின் மேற்கண்ட முறையீட்டிற்கு ஸ்ரீ பகவான் அளித்த பதிலில், "எனக்கு வித்தியாசம் ஒன்றுமில்லை. அருள், கடல்போல் பொங்கிக் கொண்டேயிருக்கிறது. ஒரு டம்ளரை கொண்டு வருபவன் தவலையை கொண்டு வந்த அளவு எடுத்துக் கொள்ள முடியவில்லையேயென்று எப்படிக் குறை கூற முடியும்?" என்று விளக்கியுள்ளார். தேகமறைவின் பிறகும் ஸ்ரீ பகவானது சாந்நித்தியமும் அருளும் தொடர்ந்து செயல்படுவதையும் இப்புத்தகத்தின் மூலம் நாம் அறியலாம்.
pp.iv+265