Arul Mozhi Thoguppu(Tamil)
இந்நூல் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள் அன்பர்களுக்கு அருளிய, 'நானார்?', 'விசாரசங்கிரகம்', 'உபதேசமஞ்சரி' ஆகிய மூன்று உபதேச நூல்களை உள்ளடக்கியதாகும்.
1902-ஆம் வருடத்தில் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள் அன்பர் சிவப்பிரகாசம் பிள்ளையவர்களின் வினாக்கட்கு எழுத்து மூலம் அருளிய விடைகளின் தொகுப்பே 'நானார்?; என்னும் நூல்.
1900-02ஆம் வருடங்களில் அன்பர் கம்பீரம் சேஷய்யரின் வினாக்கட்கு ஸ்ரீ பகவானிடமிருந்து எழுத்து மூலம் கிடைத்த விடைகள் 12 விடயங்களாகப் பிள்ளையவர்களால் வகுக்கப் பெற்ற நூல் 'விசாரசங்கிரகம்'.
பின்னர் அன்பர் நடனானந்தர் மஹர்ஷிகளிடம் தாம் கேட்டறிந்த விடயங்களை நான்கு பிரகரணங்களா யமைத்து வெளியாக்கின நூலே 'உபதேசமஞ்சரி' யாகும்.
இம்மூன்று நூல்களும் ஸ்ரீ பகவானது உபதேசங்களின் சாரமாகும். பின்னர் வெளிவந்த, பகவானது உபதேசங்கள் அடங்கிய
எல்லா நூல்களும் இவற்றின் விரிவுரைகளே எனலாம்.
பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் வசனாமிருதமாகிய இந்நூலால், உலகத்தில் ஆஸ்திகம் பெருகி, ஜீவர்கள் ஸர்வதுக்க நிவிருத்தி பரமானந்தப் பிராப்தி வடிவாகிய பரமைசுவரியத்தை அடைவது திண்ணம்.