Anudinamum Sri Bhagavanudan(Tamil)
Non-returnable
Rs.150.00
Product Details
Language Tamil.அனுதினமும் ஸ்ரீ பகவானுடன் என்ற இந்நூலின் ஆசிரியரான தேவராஜ முதலியார் தனது 13-வது வயதிலேயே ஸ்ரீ பகவானை விரூபாக்ஷ குகையில் தரிசித்தவர். சித்தூரில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் 1930-களில் ஸ்ரீபகவானிடம் மிகவும் ஈடுபாடு கொண்டு 1942 முதல் பல ஆண்டுகள் ஸ்ரீ ரமணாச்ரமத்திலேயே வசித்து வந்தார்.
ஸ்ரீ ரமண அரசரவையில் மொழிபெயர்ப்பாளராக விளங்கிய முதலியாரது ரமண நினைவுகள் 1960-இல் மை ரிகலக்ஷன் ஆஃப் ஸ்ரீ பகவான் என்று பதிப்பிக்கப்பட்டு தாயும் நீயே தந்தையும் நீயே என்று தமிழில் 1999-இல் வெளியிடப்பட்டது. ஸ்ரீ பகவானது உபதேசங்களை இவர் சுருக்கமாக ஜெம்ஸ் ஃப்ரம் பகவான் என்றும் எழுதியுள்ளார்.
ஸ்ரீ பகவானிடம் ஒரு குழந்தையின் உரிமையுடன் பழகிவந்த முதலியார், பல சாதகர்களின் ஆன்மிகக் கேள்விகளுக்கும் தனக்கே ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் ஸ்ரீ பகவான் அளித்த விளக்கங்களை தனது குறிப்பேட்டில் எழுதி வந்தார். இவை ஆங்கிலத்தில் டே பை டே வித் பகவான் என்று 1952-இல் புத்தகமாக வெளியிடப்பட்டு தற்போது தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது.
ஆன்மிக சாதனையில் ஏற்படக்கூடிய எல்லா விதமான சந்தேகங்களுக்கும் அதற்கான விரிவான விளக்கங்களும் இந்நூலில் எங்கும் பரந்து கிடக்கின்றது. மேலும் ஸ்ரீ பகவானது சரள சுபாவம், அளவிடற்கறிய அவரது ஆன்மிக கம்பீரம், கருணை மற்றும் நகைச்சுவை ஆகியவற்றையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. அனுதினமும் ஸ்ரீ பகவானுடன் என்ற இந்நூல், ஆன்மதாகங் கொண்ட அனைவரும் பரம்பொருளாகிய பகவானுடன் ஒவ்வொரு நொடியும் வாழ வழிவகுக்கின்றது.
பக்கங்கள் 452