Aksharamana Malai Virutti Urai by Muruganar(Tamil)
Language Tamil.ஸ்ரீ ரமண பகவான் தம்மைச் சரணடைந்த அடியார் உய்யும் பொருட்டுத் திருவாய் மலர்ந்தருளிய அருணாசல அக்ஷர மணமாலைக்கு ஸ்ரீ முருகனார் அருளிய விருத்தியுரையின் மூன்றாவது பதிப்பு இது. இப்பதிப்பில் சமீபத்தில் கையெ
த்துப்படி (Manuscript) வடிவில் கண்டெடுக்கப்பட்ட உரைப்பகுதிகள் சேர்க்கப்பட்டு முதன் முறையாக வெளிவருகின்றன. இந்நூலில் உவகைதரும் பகுதிகளுக்கு எடுத்துக்காட்டாகச் சில:
பகவான் இத்துதியை அருளியதற்குக் காரணம்: சமாதி சாதித்த பின்பும் தோத்திரம் செய்தற்கு அவசியம் என்னை எனின் அவ்வீசனடியை வழிபட்டு அவனருளை நாடி அதுவே பற்றுக் கோடாகத் தம்போலவே அனைவரும் உய்தற்பொருட்டு எழுந்த கருணையாலன்றித் தாமடையவேண்டியதொன்று இருப்பதாகக் கருதி அதன் பொருட்டுச் செய்தாரல்லர் [பாடல் 63].
இறைவனது உண்மையான அருட்செயல்: தன் அடியர் அகங்காரத்தை அழிப்பதன் கண்ணேயாம் [பாடல் 28].
அகமுகம்: மனத்தை வெளிவிஷயங்களில் விடாமல் அதன் மூலமான இதயத்தில் இருப்பித்தலே அகமுகம் என்பதாம் [பாடல் 44].
மனம் மொழிகளின் தூய்மை: சிந்தைக்குத் தூய்மை நிராசையும், மொழிக்குத் தூய்மை அஹிம்சையோடு மாறுபடாத ஸத்யமுமாம் [பாடல் 47].
ஸ்ரீ பகவான் அருளிய உபதேசங்கள் பலவும், சாதகர்க்குப் பயன்படும் அரிய உளவுகளும் இவ்வுரையில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. இதனை பக்தி சிரத்தையோடு அநுசந்தானம் செய்யும் அன்பர்கள் உள்ளத் தெளிவும் உவகையும் பெறுவது உறுதி.
பக்கங்கள் 160